உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இரண்டாம் பருவ வகுப்பு அக்., 6ல் துவக்கம்

இரண்டாம் பருவ வகுப்பு அக்., 6ல் துவக்கம்

உடுமலை, ; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள் அக்., 6ம் தேதி துவங்குகிறது. உடுமலை கோட்டத்துக்குட்பட்ட உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு நடக்கிறது. தேர்வு மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு கடந்த 11ம் தேதியும், நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 15ம் தேதியும் தேர்வு துவங்கியது. துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த 17 ம்தேதி முதல் நடக்கிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 26ம் தேதி முதல் காலாண்டு தேர்வு நிறைவு பெறுகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை வரும் 27ம் தேதி முதல் அக்., 5ம்தேதி வரை ஒன்பது நாட்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்., 6ம் தேதி இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள் துவங்குவதாக, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை