உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதைகள் திருவிழா: பொதுமக்கள் ஆர்வம்

விதைகள் திருவிழா: பொதுமக்கள் ஆர்வம்

பல்லடம் : பல்லடம் அருகே, நேற்று துவங்கிய பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டு இயக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் பல்லடம் வனம் அமைப்பு சார்பில், இரண்டாம் ஆண்டு விதைகள் மற்றும் உணவு திருவிழா, பல்லடம் அருகே, அருள்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. விழாவில், பாரம்பரிய நெல் ரகங்கள், காய்கறிகள், விதைகள், முன்னோர் பயன்படுத்திய விவசாய உபகரணங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பலவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விழாவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், நாட்டு மாடுகள், காளைகள் உள்ளிட்டவையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பலரும் விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று, பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் கண்காட்சியை கண்டுகளித்தனர். இரண்டு நாட்களாக நடக்கும் இந்த விழா, இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை