உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணிடம் பணம் பறிப்பு

பெண்ணிடம் பணம் பறிப்பு

திருப்பூர்; திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர், 38 வயது பெண் தனியாக வசித்து வருகிறார். வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு இரவு துாங்கி கொண்டிருந்தார். வீட்டுக்குள் நுழைந்த ஒருவர், பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன், ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர். வீரபாண்டி, வள்ளலார் நகரை சேர்ந்த ராஜா, 30 என்பது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ