தேசிய ஹாக்கிப்போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
உடுமலை : தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் விளையாடுவதற்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில், ஜூனியர் பிரிவு ஹாக்கி தமிழக அணிக்கான தேர்வுப்போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டியில், இப்பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ேஹமபிரசாத், தமிழக அணியின் சார்பில் தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டியில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டி, போபாலில் டிசம்பர் மாதம் நடக்கிறது. இம்மாணவரை பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டினர்.