மேலும் செய்திகள்
கலை விழா
17-Feb-2025
பொங்கலுார்: அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில் 'சிஸ்க்ரா - 2025' நடந்தது. இதில் பல்வேறு பொறி யியல் கல்லுாரிகளில் இருந்து, 350 மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். பேஷன் டெக்னாலஜி, 3ம் ஆண்டு மாணவி அருணா வரவேற்றார். மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.அனாலெக்ட் இந்தியா இணை இயக்குனர் நடராஜன் ஆறுமுகம், கல்லுாரி துணைத் தலைவர் கருப்பண்ணசாமி, நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், பேஷன் டெக்னாலஜி துறை தலைவி சுகந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் பாலகுமார் நன்றி கூறினார்.
17-Feb-2025