மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
16-Mar-2025
திருப்பூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் குறித்த விளக்க கூட்டம், திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள ஆர்.கே., ரெசிடென்ஸியில் நேற்று நடைபெற்றது.கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் முன்னிலை வகித்தார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவி இயக்குனர் ரவீந்திரன் பேசியதாவது:தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் கீழ், ஓரிட சேவை மையங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. பகுதி அளவிலான அருகாமை மையம், வட்டார அளவில் ஓரிட சேவை மையம், உட்கோட்ட சேவை மையம் என்கிற மூன்று நிலைகளில் ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது.இவற்றின் வாயிலாக, மாற்றுத்திறனாளிகளை கண்டறிவது, அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை கண்டறிந்து களைவது, தேவையான வழிகாட்டுதல்கள் வழங்குவது உள்பட அனைத்து பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாவட்டத்தில் விரைவில் ஓரிட சேவை மையங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், வட்டாரம், கோட்ட அளவில் மொத்தம் 21 ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இம்மையங்களுக்கு தனியே பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகாமையிலுள்ள மையங்களை அணுகுவதன்மூலம், தேவையான உதவிகளை விரைவாகவும், சுலபமாகவும் பெறமுடியும்' என்றார்.போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
16-Mar-2025