உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பார்க்கிங் தளம் ஆன சர்வீஸ் சாலை

பார்க்கிங் தளம் ஆன சர்வீஸ் சாலை

திருப்பூர்; அவிநாசியை ஒட்டிய, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, பைபாஸ் ரோட்டில், தினசரி ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. டூவீலர் முதற் கொண்டு, சரக்கேற்றி செல்லும், 10 சக்கர லாரிகள் வரை, அனைத்து வாகனங்களும் பயணிக்கும் நிலையில், இருவழிப்பாதைக்கு நிகராக, புறவழிச்சாலை இல்லை; இச்சாலையின் அகலம் குறைவாகவே இருக்கிறது. வாகனங்கள் கவனத்துடனேயே சென்று, வர வேண்டியிருக்கிறது.சமீப ஆண்டுகளாக நெடுஞ்சாலை 'சர்வீஸ்' ரோட்டோரம், ஓட்டல், பர்னிச்சர், டைல்ஸ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உருவாகியுள்ளன. 'சர்வீஸ்' ரோட்டோரம் சரக்கு லாரிகள் 'பார்க்கிங்' செய்யப்படுவால், பெரும் இடையூறு ஏற்படுகிறது என, திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.'சரக்கு லாரிகள் அணிவகுப்பதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, கனரக வாகனங்கள் ஒரே சமயத்தில் அணிவகுத்து நிற்பதை தவிர்த்து, ஒரு லாரியில் இருந்து பொருட்கள் இறக்கியவுடன், மற்றொரு லாரியை அனுமதிக்கும் வகையிலான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.இதனால், அவ்வழியாக வரும் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவது தவிர்க்கப்படும். எனவே, போலீசார், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்கின்றனர், இச்சங்கத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ