மேலும் செய்திகள்
சாலையில் பாயும் கழிவுநீர்; பாவம்... பொதுமக்கள்
11-Aug-2025
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு பனியன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களும் அமைந்துள்ளன. இதில் ராயபுரம் விரிவு பகுதியில் உள்ள கட்டடங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அங்குள்ள வடிகால் வழியாக சென்று, நொய்யல் கைரையை ஒட்டி அமைந்துள்ள வடிகாலில் சென்று சேருகிறது. இந்நிலையில் இந்த ரோட்டில், நொய்யல் ரோட்டைச் சந்திக்கும் இடத்தில் குப்பைக் கழிவுகள் குவிக்கப்படுகிறது. கழிவுகள் தற்போது நிறைந்து ரோடு முழுவதும் பரவிக்கிடக்கிறது. குப்பை தற்போது கழிவு நீர் வடிகால் முழுவதும் தேங்கியுள்ளது. இதனால், இதில் கழிவு நீர் செல்ல வழியின்றி, ரோட்டில் ஆறு போல் பாய்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் இந்த ரோட்டில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குப்பை கழிவுகளுடன் கழிவு நீரும் கலந்து ராயபுரம் விரிவு பகுதிக்குச் செல்லும் ரோடு துர்நாற்றத்துடன் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
11-Aug-2025