உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீதியில் கழிவுநீர் குளம்; மக்கள் தவிப்பு

வீதியில் கழிவுநீர் குளம்; மக்கள் தவிப்பு

திருப்பூர்; சாமிநாதபுரம் பகுதியில், வீதியில் கழிவுநீர் 'குளம்' உருவாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட சாமிநாதபுரம் பகுதியில், ஏராளமான வீடுகள் உள்ளன. இதில் உள்ள கடைசி வீதியில் வடிகாலுக்கு உரிய டிஸ்போஸபிள் பாயின்ட் இல்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அந்த வீதியில் ஒரு காலியிடத்தில் கட்டிவைத்துள்ள தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. தினமும் மாநகராட்சி கழிவுநீர் வாகனம் வந்து அங்கு சேகரமாகும் கழிவு நீரை எடுத்துச் செல்கிறது. வாகனம் வரத் தாமதமாகும் நிலையில் தொட்டி நிரம்பி கழிவுநீர் அங்குள்ள ரோட்டில் முழுமையாக பாய்ந்து அருகேயுள்ள தாழ்வான பகுதிக்குச் செல்கிறது. சில நாட்களாக வாகனம் வராமல், அகற்றப் படாத கழிவு நீர் ரோட்டில் பாய்கிறது. ரோடு முழுவதும் கழிவு நீர் ஓடுகிறது. ரோட்டில் பாதசாரிகள், வாகனங்கள் செல்ல முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் அருகேயுள்ள காலியிடம் வழியாகப் புகுந்து செல்கின்றனர். பாதசாரிகள் அங்குள்ள மண் மேட்டின் மீது தடுமாறி ஏறி கடந்து செல்கின்றனர். இங்கு 'நமக்கு நாமே' திட்டத்தில் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு உரிய வழியில்லாத நிலையில், கழிவு நீர் தொட்டியை பெரிய அளவில் கட்டி, குழாய் பதித்து மோட்டார் மூலம் கழிவுநீரை சற்று தள்ளியுள்ள வடிகாலில் இணைக்க திட்டமிடப்பட்டது. அந்த திட்டமும் கைவிடப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவது மட்டுமே இதற்கான தீர்வாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை