உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழைநீருடன் கழிவுநீர் குளம்

மழைநீருடன் கழிவுநீர் குளம்

தண்ணீர் வீண்மங்கலம் ரோடு, கருவம்பாளையம் ரவுண்டானா வளைவில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமடைந்துள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- வின்சென்ட்ராஜ், கருவம்பாளையம்.n ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம், பரமசிவன் கோவில் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- மேகலா, கருமாரம்பாளையம்.ஒயரில் செடிகுமரன் ரோடு, நொய்யல் பாலத்தின் கீழ் இருந்து செடிகள் வளர்ந்து, கேபிள் ஒயர்களில் படர்ந்துள்ளது. செடிகளை அகற்ற வேண்டும்.- ராஜூ, குமரன் ரோடு.மரத்துக்கு ஆபத்துஅங்கேரிபாளையம் மெயின் ரோட்டில் மர்மநபர்களால் இரவில் நன்கு வளர்ந்து நிழல் தரும் மரங்கள் வெட்டப்படுகிறது. மரங்களை வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நாதன், அங்கேரிபாளையம்.அபாய மின்கம்பம்தாராபுரம் ரோடு, கோபால் நகர் ஐந்தாவது வீதியில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், கம்பத்தை மாற்ற வேண்டும்.- ஷியாம்ரக் ஷன், கோபால் நகர்.n அவிநாசி, எஸ்.மேட்டுப்பாளையத்தில் கம்பி துருப்பிடித்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.- ஈஸ்வரன், எஸ்.மேட்டுப்பாளையம்.மழைநீர் தேக்கம்அவிநாசி - மங்கலம் ரோடு, பை-பாஸ் பாலத்தின் கீழ் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால், மழை பெய்யும் போது மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்குகிறது.- மகேஷ்குமார், மங்கலம்.குழாய் அடைப்புகுமரன் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை பாலத்தில் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால், மழைநீருடன் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது.- அருணாசலம், அரிசிக்கடை வீதி.எப்படி செல்வது?தென்னம்பாளையம், நாவிதன் தோட்டம் முதல் வீதி பாலத்தின் ஒருபுறம் பெரிய குப்பை தொட்டியும், மறுபுறம் வாகனங்களும் இடையூறாக நிறுத்தப்படுகிறது. வாகனங்கள் சென்று வர வழியில்லாமல் உள்ளது.- ஜோதிகுமார், நாவிதன்தோட்டம்.ரியாக் ஷன்ஒளிமயம்திருப்பூர், சிங்காரவேலன் நகர், பழைய எஸ்.பி., அலுவலக வீதியில் தெருவிளக்கு எரியாமல், கும்மிருட்டாக இருப்பது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு, எரிகிறது.- லோகநாதன், செல்வலட்சுமி நகர்.n திருப்பூர், நல்லுார் - பொன்முத்து நகர் மூன்றாவது வீதியில் தெருவிளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து காணப்பட்டது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், புதிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.- செந்தில்குமார், பொன்முத்து நகர்.புதிய சாலைஅவிநாசி, சாய்பாபா காலனி, அய்யப்பன் கோவில் அருகே ஜல்லி கொட்டி ரோடு போடாமல் இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. புதிய தார் ரோடு போட்டுள்ளனர்.- மணி, அவிநாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை