உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவுநீர் தேக்கம் ; மக்கள் அவதி

கழிவுநீர் தேக்கம் ; மக்கள் அவதி

திருப்பூர்; திருப்பூர் - பல்லடம் ரோடு வித்யாலயம், வீரபாண்டி பிரிவு ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் சேகரமாகும் மழைநீர் மற்றும் கழிவு நீர் இந்த வடிகால் வழியாகச் சென்று, பிரதான கால்வாயில் சேரும் வகையில் உள்ளது.இதில் வித்யாலயம் பஸ் ஸ்டாப் அருகே வடிகாலில் பெருமளவு கழிவுகள் தேங்கி, கழிவு நீர் செல்ல முடியாமல் பல நேரங்களில் அடைப்பு ஏற்படுகிறது.துாய்மைப் பணியாளர்கள் சில சமயங்களில் அவற்றை துார் வாரி, திடக்கழிவுகளை அகற்றி, அருகிலேயே போட்டுச் சென்று விடுகின்றனர்.இதனால், அக்கழிவுகள் மீண்டும் வடிகாலுக்குள் விழுந்து அடைத்துக் கொள்கிறது.பஸ் ஸ்டாப் அருகே, பெரும்பாலான நேரம், கழிவு நீர் ரோட்டில் சென்று பாய்கிறது. கடும்துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது.கால்வாய் முறையாக துார் வாரி, கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ