உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; 2 பேருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; 2 பேருக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர் : திருப்பூரில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, இருவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.திருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவரது வீட்டு அருகில் வசித்து வரும் பாபு, 47 மற்றும் இளையராஜா, 38 ஆகியோர் கடந்த, 2020 ஏப்., 24ம் தேதி தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். புகாரின் பேரில், கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கில், இருவரை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அதில், பாபு மற்றும் இளையராஜா ஆகிய இருவருக்கும், தலா இருபது ஆண்டு சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானார். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த போலீசாரை, கமிஷனர் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை