உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பூர் ; திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 35. கூலித் தொழிலாளி. கடந்தாண்டு, மே மாதம், அப்பகுதியைச் சேர்ந்த, 10 மற்றும், 8 வயது சிறுவர்கள் இருவரை, தன்னுடன் அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரில், போக்சோ பிரிவில் உடுமலை மகளிர் போலீசார், ஈஸ்வரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.நேற்று, இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு, 5 ஆண்டு சிறை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி