பொதுத்தேர்வில் அசத்திய சக்தி விக்னேஷ்வரா பள்ளி
திருப்பூர்: பெருமாநல்லுார், பொங்குபாளையம் சக்தி விக்னேஷ்வரா கல்வி நிலைய மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி ெபற்று, சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பில், மாணவி ஹேமயாழினி, 496 மதிப்பெண்களுடன், மாநில அளவில் நான்காமிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளி அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். 495 மதிப்பெண்களுடன், நாக சபரி, பள்ளி அளவில் இரண்டாமிடம்; 492 மதிப்பெண்களுடன் ரித்திகாஸ்ரீ மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.அறிவியலில் 3 மாணவர்கள்; சமூக அறிவியலில் 5 பேர், நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600 க்கு 588 மதிப்பெண்களுடன் அபர்ணா, பள்ளி அளவில் முதலிடம்; 586 மதிப்பெண்களுடன் இளமதி இரண்டாமிடம்; 583 மதிப்பெண்களுடன் விஜயமல்லீஸ்வரி மூன்றாமிடம். கணினி அறிவியல் - 6, கணிதம் - 2, வேதியியல், கணினி பயன்பாடு மற்றும் வணிகலியல் பாடங்களில் தலா ஒருவர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிளஸ் 1 பொதுத்தேர்வில், நரேன் கார்த்திக் (577) முதலிடம், இந்துமதி (572) இரண்டாமிடம், விஜய் (565) மூன்றாமிடம் பிடித்துள்ளனர். கணினி அறிவியலில் 3 மாணவர்கள் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளி முதல்வர் சக்திவேலுசாமி, தாளாளர் மயிலாவதி, துணை முதல்வர் யமுனாதேவி, உதவி தலைமை ஆசிரியர் சத்தியராஜ், ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், துணைத் தாளாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர், பொதுத்தேர்வு களில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.