உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஷாம்பவி மஹா முத்ரா ஈஷா யோகா பயிற்சி

ஷாம்பவி மஹா முத்ரா ஈஷா யோகா பயிற்சி

அவிநாசி: அவிநாசி ரோட்டரி சங்கத்தில் வரும், 5ம் தேதி முதல் ஏழு நாள் யோகா வகுப்பு நடக்கிறது. 'ஷாம்பவி மஹா முத்ரா' என்ற ஈஷா யோகா, ஏழு நாள் வகுப்பு அவிநாசியில் வரும், 5ம் தேதி நடக்கிறது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகில் உள்ள, அவிநாசி ரோட்டரி சங்க அரங்கத்தில் தினமும் காலை, 6:00 முதல், 8:30 மணி வரை, காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை மற்றும் மாலை, 6:00 முதல், 8:30 மணி வரை, மூன்று வேளைகளில் நடக்கிறது. 15 வயதுக்கு மேற்பட்ட, அனைவரும் பங்கேற்று பயனடையலாம். இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதால், ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை வியாதி, முதுகு வலி போன்வற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். சிந்தனையில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலை, செயல் திறன் அதிகரிப்பு ஆகியவற்றை உணரலாம். மன அழுத்தம், பயம் மற்றும் கவலையிலிருந்து விடுபடலாம். மேலும் விபரங்களுக்கும், முன்பதிவிற்கும், 80720 10124 தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர், அவிநாசி பொறுப் பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ