உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடையை உடைத்து 3.5 லட்சம் கொள்ளை

கடையை உடைத்து 3.5 லட்சம் கொள்ளை

உடுமலை; உடுமலையில், மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து, 3.5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை நகரம், பழநி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில், செல்வகணேஷ் மளிகை கடை செயல்பட்டு வருகிறது. கடையின் மறுபகுதியில், வாரச்சந்தையின் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது.இந்த கடையை நேற்று காலை பணியாளர்கள் திறந்த போது, மேற்கூரை சேதமடைந்தது தெரியவந்தது. இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விசாரணையில், கடையின் மேற்கூரையை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த 3.5 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், கடையின் 'சிசிடிவி' கேமராவுக்குரிய 'ஹார்ட் டிஸ்க்' கும் திருடு போயிருந்தது.இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வணிக வளாகத்திலுள்ள கடையில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை