உள்ளூர் செய்திகள்

இன்று கடையடைப்பு

திருப்பூர் : அபரிமிதமான சொத்துவரி உயர்வு, வாடகையில் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு எதிராக, தொடர் போராட்டம் துவங்கியுள்ளனர். திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில், கடந்த 8ம் தேதி முதல் கடைகளின் முன், கறுப்புக்கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.அனைத்து வணிகர்கள் சார்பில், இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லுார், தாராபுரம், பல்லடம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில், அனைத்து வியாபாரிகளும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.போராட்டத்துக்கு ஆதரவாக, 'டீமா' சங்கம், திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் (டிப்மா), திருப்பூர் சவர தொழிலாளர் சங்கத்தினரும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.அ.தி.மு.க., சார்பில், சொத்துவரி உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, 16ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது. திருப்பூர் அனைத்து வணிகர் சங்க பேரவையின் தலைவர் துரைசாமி கூறுகையில், '' சொத்துவரி உயர்வு, வாடகை கட்டட ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை, திரும்பப்பெற வலியுறுத்தி, நாளை (இன்று) முழு கடையடைப்பு நடக்கிறது. பொதுமக்களும், அனைத்து தொழில் அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.

கொ.மு.க., ஆதரவு

கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிக்கை:திருப்பூர் மாநகரில், பல வரி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். இந்த வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், முழு கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு கொ.மு.க., முழு ஆதரவு தெரிவிக்கிறது.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை