உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதலிபாளையத்தில் நாளை கடையடைப்பு 

முதலிபாளையத்தில் நாளை கடையடைப்பு 

திருப்பூர் : குப்பை கொட்டும் விவகாரத்தில் போராட்ட குழுவுக்கு ஆதரவாக, முதலிபாளையத்தில் நாளை கடையடைப்பு நடக்கிறது. திருப்பூர் வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் நெல்லைராஜன் அறிக்கை: முதலிபாளையம் பாறைக்குழியில், மா நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொண்டு சென்று கொட்டுகிறது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாளை, (22ம் தேதி) அப்பகுதியினர் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதலிபாளையம் ஊராட்சி வியாபாரிகள் சங்க பேரமைப்பு உறுப்பினர்கள் நாளை காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை ஒரு நாள் கடையடைப்பு நடத்தி ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ