வெள்ளிப்பதக்கம் வென்ற பிரன்ட்லைன் மாணவர்
திருப்பூர் : மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி, சென்னை விளையாட்டு பல்கலையில் நடந்தது. இதில், திருப்பூர் 'தி பிரன்ட்லைன்' பள்ளி மாணவன் ரிஷ்வந்த் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்; வெள்ளிப்பதக்கம், 75 ஆயிரம் ரூபாய் காசோலை அவருக்கு வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த ரிஷ்வந்த்தையும், உடற்கல்வி ஆசிரியர் செந்திலையும் பள்ளித் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.