உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை

கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை

உடுமலை, ; திருப்பூர் மாவட்டத்தில் ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு, கட்டட உரிமம் பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில், 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில், தரை தளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு, இணைய வழி கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை, Onlineppa.tn.gov.in/SWP.Web/home என்ற முகவரியில் விண்ணப்பித்து, உடனடி பதிவின் வாயிலாக அனுமதி பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி