உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவன் தியேட்டர் ரோடு அகலப்படுத்த வேண்டும்

சிவன் தியேட்டர் ரோடு அகலப்படுத்த வேண்டும்

திருப்பூர்: மாநகராட்சி நிர்வாகம், சிவன் தியேட்டர் ரோட்டை அகலப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டுமென, 'டீமா' நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம், மேயர் மற்றும் கமிஷனரிடம் அளித்த மனு: அங்கேரிபாளையம் ரோட்டையும், பி.என்., ரோட்டையும் இணைக்கும் வகையில், சிவன் தியேட்டர், 60 அடி ரோடு பயன்பாட்டில் உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் அவ்வழியாக சென்றுவருகின்றன.அப்பகுதியில், செயற்கை நுாலிழை துணி விற்பனை செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக, போக்கு வரத்து அதிகரித்துள்ளது. பி.என்., ரோட்டில் இருந்து, சிவன் தியேட்டர் ரோட்டுக்கு செல்ல, மிகக்குறுகிய ரோட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.மேலும், 60 அடி ரோடு ஒருவழிப்பாதையாக இருப்பதால், அவிநாசி ரோடு சென்றடைய மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. ஒரு கி.மீ., நீளமுள்ள, 60 அடி ரோட்டில், ரோட்டை விரிவாக்கம் செய்தால், ரோடு நேராக மாறும்; போக்குவரத்து நெரிசலும் குறையும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி