உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுமைய அளவிலான கைப்பந்து போட்டி

குறுமைய அளவிலான கைப்பந்து போட்டி

உடுமலை; உடுமலை குறுமைய அளவிலான கைப்பந்து போட்டியில், அரசு பள்ளிகள் வெற்றி பெற்றன. உடுமலை குறுமைய அளவிலான, பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி, உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. மாணவர்களுக்கான போட்டியில், 14 வயதினருக்கான பிரிவில் பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி அணி முதலிடமும், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடமும் பெற்றது. 17 வயதினருக்கான பிரிவில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், சீனிவாசா பள்ளி இரண்டாமிடம், 19 வயதினருக்கான பிரிவில், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், என்.வி., பள்ளி அணி இரண்டாமிடமும் பெற்றது. மாணவியருக்கான போட்டியில், ஜூனியர் பிரிவில் சீனிவாசா பள்ளி முதலிடம், ஆர்.கே.ஆர் ஞானோதயா பள்ளி இரண்டாமிடம், சீனியர் பிரிவில், கொழுமம் ஓம்சக்தி பள்ளி முதலிடம், சீனிவாசா பள்ளி இரண்டாமிடம், சூப்பர் சீனியர் பிரிவில் சீனிவாசா பள்ளி முதலிடம், என்.வி பள்ளி இரண்டாமிடமும் பெற்றுள்ளன. முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி