உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மைலி கண்காட்சி நாளை துவங்குகிறது

ஸ்மைலி கண்காட்சி நாளை துவங்குகிறது

திருப்பூர்; திருப்பூர், பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்டபத்தில், 7 வது 'ஸ்மைலி' கண்காட்சி, நாளை (12ம் தேதி ) துவங்குகிறது. மூன்று நாள் நடக்கும் கண்காட்சியில், 200க்கும் அதிகமான ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டு உபயோக பர்னிச்சர்கள், கார் மற்றும் 'டூ வீலர்'கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என இடம்பெறுகின்றன. கண்காட்சியில்,'புட்கோர்ட்'களும் இடம்பெற்றுள்ளன. சிறுவர்கள் விளையாட, முதன்முறையாக 'டைனோசர்'களுடன் பேசி விளையாடுவது போன்ற, 'டைனோசர் வேர்ல்டு' விளையாட்டும் இடம்பெறும். சிறுவர், சிறுமியருக்கான பல்வேறு விளையாட்டுகளும் இடம்பெற உள்ளன. இக்கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் இல்லை; அனைவரும் கண்டுகளிக்கலாம். தினமும், ஆச்சரியமூட்டும் பரிசுகளும் வழங்கப்படும் என, 'ஸ்மைலி ஈவன்ட்ஸ்' நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை