பல அடி உயரத்தில் கரும்புகை மக்களுக்கு சுவாசக்கோளாறு
பொங்கலுார்: படியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழைய இரும்பு கடை செயல்படுகிறது. அதில், ஒயர்களில் உள்ள கம்பிகளை பிரித்தெடுக்க, அடிக்கடி தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால், பல அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறுகிறது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆபத்தான பொருட்களை தீ வைத்து கொளுத்துவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.