உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துள்ளாத மீன் விற்பனை

துள்ளாத மீன் விற்பனை

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று 60 டன் கடல் மீன்கள் விற்பனைக்கு வந்தன. மத்தி கிலோ, 100, பாறை, 160, வஞ்சிரம், 350 - 450, இறால், 300, படையப்பா, 250, ஊழி, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட விலை குறைந்த போதும், இன்று தை கடைசி சுபமுகூர்த்தம், நாளை தைப்பூசம் என்பதால், மீன்களை வாங்க குறைந்த வாடிக்கையாளர்களே வந்தனர். மொத்த வியாபாரிகளும் குறைந்தளவே வாங்கிச் சென்றனர். மதியம் வரை, 60 சதவீத மீன்கள் கூட விற்பனையாகவில்லை என வியாபாரிகள் வேதனைப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ