சில வரி செய்திகள்
சிறுதானிய உணவு விழிப்புணர்வு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2, சார்பில், சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு தெருக்கூத்து நடந்தது. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவ, மாணவியர், சிறுதானிய உணவு, பாரம்பரிய உணவு, செறிவூட்டப்பட்ட உணவு குறித்து, ஆடல், பாடல் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொம்மலாட்ட விழிப்புணர்வும் நடந்தது. உணவு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து நடந்த நிகழ்ச்சியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்களுக்கு, உணவு பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.லாட்ஜ் உரிமையாளர் சங்க கூட்டம்
திருப்பூர் மாவட்ட லாட்ஜ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு, திருப்பூர் எம்.கே.எம்., லாட்சஜில் நடந்தது. சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணகுமார், அன்பகம் திருப்பதி முன்னிலை வகித்தனர். சைமா பொது செயலாளர் கோவிந்தப்பன், 'டீமா' தலைவர் முத்துரத்தினம், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டிக்மா' சங்க பொதுசெயலாளர் ரவிச்சந்திரன் உட்பட, பல்வேறு தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். லாட்ஜ் தொழிலில் ஏற்பட்டு வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், போலீஸ் கமிஷனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட லாட்ஜ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு, திருப்பூர் எம்.கே.எம்., லாட்ஜில் நடந்தது. சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணகுமார், அன்பகம் திருப்பதி முன்னிலை வகித்தனர். சைமா பொது செயலாளர் கோவிந்தப்பன், 'டீமா' தலைவர் முத்துரத்தினம், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டிக்மா' சங்க பொதுசெயலாளர் ரவிச்சந்திரன் உட்பட, பல்வேறு தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். லாட்ஜ் தொழிலில் ஏற்பட்டு வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், போலீஸ் கமிஷனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது.