உள்ளூர் செய்திகள்

சில வரி செய்திகள்

பல்லடம் அனைத்து வணிகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பல்லடம் மகாலட்சுமி நகர் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், வணிகர் நல வாரியத்துக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அனைத்து வணிகர் சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், மகாலட்சுமி நகர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி வரவேற்றார். திருப்பூர் வணிகவரித்துறை துணை ஆணையர் நாகராஜ் சிறப்புரை ஆற்றினார். வணிகவரித்துறை உதவியாளர்கள் திருலோகசந்தர், சுவாதி, வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் லாலா கணேசன், ஆலோசகர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். முதல்வரிடம் விசைத்தறியாளர் மனு (படம்) உடுமலைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பூபதி, கோபாலகிருஷ்ணன் மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், 'சாதாரண விசைத்தறிகளின் நவீனப்படுத்த கூடுதல் மானியம் வழங்கி, விசைத்தறி தொழிலையும், தொழில் சார்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், நெட் மீட்டர் வசதியுடன், சோலார் பேனல் அமைக்க, 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்.கூலியை மட்டுமே நடந்து வரும் விசைத்தொழில் தொழிலை பாதுகாக்கும் நோக்கில், ஒப்பந்த கூலியை நிறைவேற்ற சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர். தமிழர் பேரவை ஆலோசனை திருப்பூரில், தெலுங்கு மொழி பேசும் தமிழர் பேரவை சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அழகய்யன் 9போய நாயக்கர் ஒருங்கிணைப்பு நலச்சங்கம்), சீனிவாச ரெட்டி (தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம்), விஜயகுமார் (தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் சங்கம்), சவுந்தர்ராஜன் (, தமிழ்நாடு ராஜூக்கள் சங்கம்), கிருஷ்ணமூர்த்தி (திருப்பூர் தெலுங்கு சங்கம்) உட்பட பலர் பங்கேற்றனர். பேரவைக்கு தலைவராக ராமகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக செல்வராஜ், விஜயகுமார், செயலாளராக ரவிக்குமார், இணை செயலாளர்களாக வேலுசாமி, சக்திவேல், பொருளாளராக சீனிவாச ரெட்டி, ஒருங்கிணைப்பாளராக சவுந்தர்ராஜன், இணை ஒருங்கிணைப்பாளராக மனோகரன், செயற்குழு உறுப்பினர்களாக பொம்முசாமி, கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித்குமார், நாகேந்திரன், கணேஷ், ராஜாராம், ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இலவச மருத்துவ முகாம் திருப்பூர், தாராபுரம் ரோடு, பல்லவராயன்பாளையத்தில் உள்ள ஸ்ரீராம் சந்த்ர மிஷன் வைர விழா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள, எஸ்.எம்.எஸ்.எப்., மருத்துவ மையத்தில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர்கள் கார்த்திகேயன், ராமசாமி, ரவிராஜ் மற்றும் செவிலியர் குழுவினர், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். 196 பேர் முகாமில் பங்கேற்றனர். ரத்த சர்க்கரை அளவு, இதய நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 64 பேருக்கு இ.சி.ஜி., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆர்வமுள்ளவர்களுக்கு யோகாசன, தியான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. ஏற்பாடுகளை, மருத்துவ மைய ஒருங்கிணைப்பாளர் மணி, ஹார்ட்புல்னெஸ் அமைப்பினர் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், அங்கத்தினர்கள் செய்திருந்தனர். த.மு.எ.க. சங்க கிளை மாநாடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க, அவிநாசி கிளை மாநாடு நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். கலை இலக்கியப் பண்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களால் விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து, 16 பேர் அடங்கிய புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக சம்பத்குமார், செயலாளராக தினகரன், பொருளாளராக சிவராசன் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவராக காயத்ரி, துணைச் செயலாளராக ராஜேந்திரன், ரமேஷ் குமார் மற்றும் பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இன்றைய திருமணங்களின் நிலை என்கிற தலைப்பில் கவிஞர் பார்வதி மற்றும் குணசுந்தரி ஆகியோர் பேசினர். கிராமிய பாடல்களோடும் நாடகமும் நடந்தது. சம்பத்குமார் நன்றி கூறினார். உறுப்பினர் சேர்க்கை முகாம் (படம்) பல்லடம் அனைத்து வணிகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பல்லடம் மகாலட்சுமி நகர் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில், வணிகர் நல வாரியத்துக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அனைத்து வணிகர் சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், மகாலட்சுமி நகர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி வரவேற்றார். திருப்பூர் வணிகவரித்துறை துணை ஆணையர் நாகராஜ் சிறப்புரை ஆற்றினார். வணிகவரித்துறை உதவியாளர்கள் திருலோகசந்தர், சுவாதி, வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் லாலா கணேசன், ஆலோசகர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை