மேலும் செய்திகள்
பெண் கொலை: போலீசார் விசாரணை
17-May-2025
தாராபுரம்: தாராபுரம் அருகே படுத்த படுக்கையாக கிடந்த தாயை, கழுத்தை அறுத்து கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனுார், மால-மேட்டை சேர்ந்தவர் ராஜகோபால், 42; சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி, ஏழு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவரின் தாயார் மாரியம்மாள், 70; தாயுடன் வசிக்கிறார். உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக படுத்த படுக்கையாக கிடந்தார். அவரது தங்கை ஏசம்மாள், அவ்வப்போது வந்து குளிக்க வைத்து, துணி மாற்றி விட்டு செல்வார். நேற்று முன்-தினம் மதியம் வழக்கம்போல் பணிவிடை செய்ய வந்த ஏசம்மாள், மொபைல்-போனில் ராஜகோபாலை அழைத்தார். மலம் கழித்தபடி கிடந்த சகோதரியை சுத்தம் செய்த பிறகு, தாயாரை பார்த்து கொள்ள முடி-யாதா?, என்னால் முடியவில்லை என்று புலம்பிவிட்டு, வீட்டுக்கு வெளியே துணியை காயப்போட சென்றுள்ளார்.அப்போது குடிபோதையில் இருந்த ராஜகோபால், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால், மாரியம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்-படி சென்ற மூலனுார் போலீசார், ராஜகோபாலை கைது செய்-தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
17-May-2025