மாமனாருக்கு வெட்டு; மருமகன் கைது
திருப்பூர்; திருப்பூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, 30. இவரது மனைவி ராசாத்தி, 28. தம்பதியர் இடையே பிரச்னையால் பெற்றோர் வீட்டில் ராசாத்தி இருந்து வந்தார். மனைவியை சமாதானம் செய்து, கணவர் அழைத்து சென்றார். கடந்த 6ம் தேதி மீண்டும் தம்பதியர் இடையே பிரச்னை ஏற்பட்டது. ராசாத்தி பெற்றோர் வீராசாமி - செல்வி ஆகியோர் தட்டி கேட்டனர். ஆத்திரமடைந்த மருமகன், மாமனாரை அரிவாளால் கால் பகுதியில் வெட்டினார். போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.