தைப்பூசத் திருவிழா பழநிக்கு சிறப்பு பஸ்கள்
திருப்பூர் : தைப்பூசத்தையொட்டி, பிரசித்தி பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிப்பர். இவர்கள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொடுவாய், தாராபுரம் வழியாக பழநிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.வழக்கமான 'டிரிப்'களுடன், 100 சிறப்பு டிரிப்கள் பஸ்கள் இயக்கப்படும். வரும், 10ம் தேதி மதியம் முதல், 11ம் தேதி இரவு வரை சிறப்பு பஸ் இயக்கம் இருக்கும். சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு காங்கயம், பெருந்துறை, சென்னிமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, 25 'டிரிப்' சிறப்பு பஸ் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.'திருப்பூரில் இருந்து பழநிக்கு சிறப்பு பஸ்களில் பயணி ஒருவருக்கு, 60 கட்டணம் வசூலிக்கப்படும். திருப்பூரில் இருந்து சிவன்மலைக்கு பயணி ஒருவருக்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் புகார் அளிக்கலாம்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.