மேலும் செய்திகள்
2.66 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் - ஏ திரவம்
25-Oct-2025
திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை: குறைவான வெளிச்சத்தில் பார்ப்பதற்கும், நிறங்களை காண்பது, குடல், சிறுநீரகம், சுவாசப்பாதை, தோல், கண்களின் மேலடுக்கு திசுக்களின் பராமரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, மூச்சுக்குழாயில் ஏற்படும் 'எபிதீலியல்' புற்றுநோயை தடுப்பதற்கும் வைட்டமின் 'ஏ' சத்து உதவி செய்கிறது. பச்சை கீரை, காய்கறிகள், பச்சை பட்டாணி, பப்பாளி பழம், திராட்சை, மீன், முட்டை, பால், பாலாடை கட்டி ஆகிய உணவுகளில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த சத்து குறைபாட்டினால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, தீவிர சுவாச தொற்றுநோய் மற்றும் மூன்று முதல் 5 வயது குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2.50 லட்சம் முதல் 5 லட்சம் குழந்தைகள் பார்வை இழப்பு பாதிப்புக்கு உள்ளாவது தெரியவந்துளது. தமிழகத்தில் 7 சதவீதம் பேருக்கு வைட்டமின் 'ஏ' சத்து குறைபாடு உள்ளது. இதை தடுக்கும்வகையில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. தேசிய வைட்டமின் 'ஏ' குறைபாடு தடுப்பு திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்கள், வரும் 27 முதல் (இன்று), நவ. 1 ம் தேதி வரை நடைபெறுகிறது. 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 14 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் முகாம் நடைபெறும். 6 முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி., 12 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி, அளவும் வழங்கப்படும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கி அவர்களின் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
25-Oct-2025