வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்
திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் வாக்காளர்கள் சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட் பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. வரும் 3 மற்றும் 4ம் தேதியில் நடக்க உள்ளது. முகாமில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம், போட்டோ மாற்றம், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். புதிய வாக்காளர்கள், 13 வகையான ஆவணங்களின் ஒன்றின் நகலினை ஆதாரமாக வழங்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.