உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தபால் துறை சார்பில் சிறப்பு முகாம்

 தபால் துறை சார்பில் சிறப்பு முகாம்

திருப்பூர்: திருப்பூர் கோட்டத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் நேற்று சிறப்பு முகாம்கள் நடந்தன. திருப்பூர் கோட்ட அளவிலான பல தபால் நிலையங்களில் தபால் துறை சார்பில் நேற்று குழந்தைகள் தினத்தையொட்டி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடிதம் எழுதும் போட்டி, ஆதார், சேமிப்பு கணக்கு, அஞ்சல் ஆயுள் காப்பீடு சார்ந்த முகாம்கள் நடந்தன. இதில், 1,500 புதிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன என்றும், 3.13 லட்சம் மதிப்பிலான அஞ்சல் காப்பீடு பிரீமியம் தொகைகள் பெறப்பட்டன என்றும் தபால் அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ