உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்க சிறப்பு முகாம்

நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்க சிறப்பு முகாம்

உடுமலை; உடுமலையில், மின் நுகர்வோர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், நாளை நடக்கிறது.தமிழக மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம், கோட்ட அளவில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், உடுமலை கோட்ட அளவில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நாளை (5ம் தேதி), காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.இம்முகாமில், மின் நுகர்வோர் பில்லிங் தொடர்பான புகார்கள், மின் மீட்டர் சம்பந்தமான புகார்கள், குறைந்த மின் அழுத்த பிரச்னைகள், பழுதடைந்த மின் கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து புகார் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும். எனவே, உடுமலை கோட்டத்திலுள்ள பொதுமக்கள், சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !