மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு முகாம்
12-Nov-2024
திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மரியாலயா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மறு வாழ்வு மையம் சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.'சைல்டு லைன்' ஒருங்கிணைப்பாளர் தினேஷ்பாபு, வரவேற்றார். குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து, அருள்மேரி பேசினார். தலைமை ஆசிரியர் பாபுபிரேம்குமார் வாழ்த்துரை வழங்கினார். இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைய குழுவின் செயலாளர் ஷபினா, சிறப்புரை ஆற்றினார்.
12-Nov-2024