உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோர்ட் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கோர்ட் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில் வக்கீல்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் கிளப், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வக்கீல் சங்கம் ஆகியன சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகத்தில் நேற்று இம்முகாம் நடந்தது. லோட்டஸ் கண் மருத்துவமனை, ஆதவ் பல் மருத்துவமனை மற்றும் எஸ்.பி., ஸ்கின் கேர் ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின. சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் செல்லதுரை, செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தனர். கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா முகாமைத் துவக்கி வைத்தார். வக்கீல் சங்க நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் தலைவர் பரமேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதில் வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை