உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், ஒன்றியம் வாரியாக நடக்கிறது. அதன் அடிப்படையில், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள குழந்தைகளுக்கு, வரும், 24ம் தேதி, காலை 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை மடத்துக்குளம் கே.டி.எல்., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.அதே போல், குடிமங்கலம் ஒன்றியத்திற்கு, வரும், 31ம் தேதி, காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடக்கிறது.உடுமலை ஒன்றியத்திலுள்ள குழந்தைகளுக்கு, வரும், பிப்., 5ம் தேதி, காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, உடுமலை, தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி