உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராஜஸ்தானுக்கு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

ராஜஸ்தானுக்கு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

திருப்பூர்: டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருவதால், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவை - ராஜஸ்தான் மாநிலம் மதார் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ளது மதார். இயற்கை வாழ்விடங்கள், சுற்றுலா தலங்களுக்கு புகழ்பெற்ற இப்பகுதிக்கு பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, மதார் பகுதிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 13ம் தேதி முதல் வியாழன் தோறும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. அதிகாலை, 2:30 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், சனிக்கிழமை காலை, 11:20 மணிக்கு ராஜஸ்தான் சென்று சேருகிறது; திருப்பூருக்கு வியாழன் அதிகாலை, 3:13 மணிக்கு வரும். டிச. 4ம் தேதி வரை இந்த ரயில் இயங்கும். மறுமார்க்கமாக ஞாயிறு இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, புதன் காலை 8:30 மணிக்கு கோவை வந்து சேரும். இந்த ரயில் டிச. 7ம் தேதி வரை இயங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ