உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதுகுத்தண்டு பாதித்தோருக்கு ஸ்கூட்டர் தராமல் இழுத்தடிப்பு

முதுகுத்தண்டு பாதித்தோருக்கு ஸ்கூட்டர் தராமல் இழுத்தடிப்பு

திருப்பூர்; தமிழ்நாடு முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் சங்க (டி.என்.எஸ்.டி.ஏ.,) பொதுச்செயலாளர் லலித்குமார் நடராஜன் தலைமையில், இணை பொருளாளர் வேலுச்சாமி உள்பட சங்க உறுப்பினர்கள் 15 பேர், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து, மனு அளித்தனர். பொதுச்செயலாளர் கூறியதாவது:முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் குறித்து தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பிரத்யேக பேட்டரி வீல் சேருக்கு, ஐந்து ஆண்டுகள் இலவச உதிரி பாகங்களுடன் கூடிய சர்வீஸ் உறுதி செய்யப்படவேண்டும்.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதுகு தண்டுவடம் பாதித்த ஒரே ஒரு பயனாளிக்கு மட்டுமே, பிரத்யேக ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பல மாதங்களாகியும் காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து ஸ்கூட்டர் வழங்க வேண்டும்.புதிதாக பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர உதவித்தொகை மற்றும் பராமரிப்பு உதவித்தொகை கிடைப்பதில் காலதாமதங்களைத் தவிர்க்கவேண்டும்.முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கு, 'மக்களை தேடி' மருத்துவம் திட்டத்தில், வீடு தேடிச் சென்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கவேண்டும். அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும்வகையிலான கட்டமைப்புகளுடனான வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும்.முதுகு தண்டுவடம் பாதித்தோர், படுக்கை புண், சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் போது, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டியுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், முதுகு தண்டு பாதித்த மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் சென்று பயன்படுத்தும்வகையிலான கழிப்பிட வசதி இல்லை. அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் சுயமாக பயன்படுத்தும்வகையிலான கழிப்பிட வசதி ஏற்படுத்தவேண்டும்.தமிழக அரசு, முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைத்து, வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.----கலெக்டரை 'கட்' செய்ய வேண்டும்--------------------------பொதுச்செயலாளர் லலித்குமார் நடராஜன் உள்ளிட்ட தமிழ்நாடு முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் சங்க நிர்வாகிகள்.

'மூன்று வகை வாகனங்களும்

பயனாளிக்கு வழங்குங்கள்'''முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பிரத்யேக ஸ்கூட்டர், பேட்டரி வீல் சேர், நியோ போல்ட் வீல் சேர் ஆகிய மூன்றும் தேவைப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில், ஒரே பயனாளிக்கு இந்த மூன்றுவகை வாகனங்களும் வழங்கப்படுகின்றன. திருப்பூரிலோ, ஒரு பயனாளிக்கு, பேட்டரி வீல் சேர், நியோ போல்ட் வீல் சேர், ஸ்கூட்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே வழங்குகின்றனர்.பிற மாவட்டங்கள் போல், திருப்பூரிலும், ஒரே பயனாளிக்கு வெவ்வேறு பயன்பாட்டுக்கான மூன்று வாகனங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று டி.என்.எஸ்.டி.ஏ., பொதுச்செயலாளர் கூறினார்.

சட்ட பாதுகாப்பு

காப்பீடு சிக்கல்முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பு ஆயுளுக்கும் நிரந்தரமானது. ஆனாலும் மருத்துவர்கள், தற்காலிக பாதிப்பு என்பது போலவும், மூன்று அல்லது ஐந்து ஆண்டுக்குப்பின் பரிசோதிக்கவேண்டும் என குறிப்பிடுகின்றனர். இதனால், விபத்துகளில் சிக்கி முதுகு தண்டுவடம் பாதிக்கப்படுவோர், சட்ட ரீதியான பாதுகாப்பு, காப்பீடு சேவைகள் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை