உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்மிக ஆட்சி மலரும்

ஆன்மிக ஆட்சி மலரும்

பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற போராட்டம் நடந்தது. இனி ஒரு போர் நம் மத சுதந்திரத்துக்கு நடத்த வேண்டியுள்ளது. அது அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலாகத் தான் இருக்கப் போகிறது. அடுத்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். இங்குள்ள 234 தொகுதிகளிலும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது. நமது கூட்டணி வெற்றி பெறும்; பழனிசாமி தான் தமிழகத்தின் முதல்வர். இந்த மாற்றம் திருப்பூர் மண்ணில் துவங்க வேண்டும். ஆன்மிக ஆட்சி இங்கு மலரும். கொங்கு நாடு பக்தி உடையது. அதன் எதிரொலி தான் இந்த விழா. இந்த ஆட்சி ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி. கோவில் நிலங்கள் காணாமல் போய் விட்டது. கோவில்களே பல இடங்களில் காணாமல் போய் விட்டது. இருந்த கோவில்கள் பல இடங்களில் இடிக்கப்பட்டது. இதை தடுக்கத்தான் இந்த எழுச்சியை ஹிந்து முன்னணி ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை கொள்ளையடிக்கும் அறநிலையத் துறையே இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ