உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டு போட்டி குமுதா பள்ளி அசத்தல்

விளையாட்டு போட்டி குமுதா பள்ளி அசத்தல்

திருப்பூர்: முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி சமீபத்தில் பெருந்துறையில் நடந்தது. இதில், நம்பியூர் குமுதா பள்ளி மாணவர், மாணவியர் இறுதிபோட்டியில் வென்று முதலிடம் பிடித்து, மொத்தம், 72 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றனர். நாமக்கல்லில் நடந்த மண்டல அளவிலான கடற்கரை வாலிபால் போட்டியில் குமுதா பள்ளி மாணவர், மாணவி அணியும், மண்டல அளவில், இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம், தலா, 2 ஆயிரம் வீதம், 8 ஆயிரம் ரூபாய் பெற்றனர். ஈரோட்டில் நடந்த ஆடவர் இரட்டையர் போட்டியில், தருண், கவின், மூன்றாமிடம் பிடித்து சாதித்தனர். வெற்றி வாகை சூடிய மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்பட பலர் பாராட்டி வாழ்த்தினர்.---பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதித்த மாணவ, மாணவியருடன் குமுதா பள்ளி நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !