உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்

 ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்

திருப்பூர்: ஸ்ரீ ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண மங்கள வைபவம், திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் ரோட்டிலுள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாலை, 4:30 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் விழா துவங்கியது. குத்து விளக்கு ஏற்றப்பட்டு, இறை வணக்கம் பாடப்பட்டது. 'ஸ்ரீ ஆண்டாள் கல்யாணம்' தலைப்பில், கல்யாணபுரம் உ.வே. ஆரா அமுதாச்சாரியாரின் இசை சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்த, மாலை, 6:00 மணிக்கு, சாய்கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியர் குழுவினர் வரவேற்பு நடனத்துடன், சீர்வரிசைகள் வந்துசேர்ந்தன. தொடர்ந்து, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அனைவரும் திருமாங்கல்யத்தை தொட்டு வணங்கினர். கன்னிகாதானத்தை தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத விற்பன்னர்கள் வேதங்களை பாராயணம் செய்ய, திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. அனைவருக்கும், மஞ்சள், குங்குமம், வளையல், தாலிச்சரடு ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்கல்யாண விருந்தும் வழங்கப்பட்டது. திருக்கல்யாண ஏற்பாடுகளை, ராம்ராஜ் காட்டன் சுமதி நாகராஜன், ஆன்மிக சொற்பொழிவாளர் திருப்பூர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ