உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீரராகவ பெருமாள் கோவிலில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா

வீரராகவ பெருமாள் கோவிலில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா

திருப்பூர்; ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று, பாலகிருஷ்ணருக்கு சங்குப்பால் புகட்டும் வைபவம் நடந்தது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு மகா திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு, ஊஞ்சல் வைபவமும், பாலகிருஷ்ணருக்கு சங்குபால் வார்க்கும் நிகழ்ச்சியும், திருஆராதனம் மற்றும் சாற்றுமறை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், கண்ணபிரான் உற்சவ மூர்த்திகளுக்கு திருஆதாரனை நிகழ்ச்சி நடக்கிறது தொடர்ந்து, வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியும், உறியடி நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை, 'தினமலர்' நாளிதழ், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை, கவிநயா நாட்டியாலயா மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் சார்பில், 'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' என்ற நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. கிருஷ்ணர் பஜனை பாடல், பாடல் கச்சேரி, வீணை கச்சேரி, விழா அறிமுக உரை, குழு நடனம் மற்றும் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது. பெற்றோருக்கு, கயிறு இழுக்கும் போட்டி, 'லக்கி நம்பர்' போட்டிகளும். குழந்தைகளுக்கு நடையில் நிற்கும் போட்டி, பந்து பரிமாற்றம் செய்யும் போட்டிகள் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, சான்றிதழ் வழங்கும் விழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை