மேலும் செய்திகள்
கோதை நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
14-Jan-2025
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை நடக்கிறது.பத்து மற்றும் 12ம் வகுப்பு, போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு யாக பூஜைகள் நடக்கின்றன.இன்று (29ம் தேதி) மாலை 6:00 மணிக்கு யாக சாலை பூஜைகள் துவங்குகின்றன. நாளை (30ம் தேதி) காலை, 10:00 மணிக்கு யாக நிறைவு பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணி முதல், மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் ,என உடுமலை திருப்பதி, ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
14-Jan-2025