உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஸ்ரீ நாச்சம்மாள் பள்ளியின் சமூக நலத்திட்ட செயல்பாடு

 ஸ்ரீ நாச்சம்மாள் பள்ளியின் சமூக நலத்திட்ட செயல்பாடு

திருப்பூர்: அவிநாசியிலுள்ள ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் சமூக நலத்திட்டம் அடிப்படையில் யோகா மற்றும் லாபிங் தெரபி நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு நடத்தியது. இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு உடல் நலம் பேணுவது குறித்த விழிப்புணர்வும் இலவச மருத்துவ பரிசோதனைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எளிய யோகா பயிற்சி, லாபிங் தெரபி பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயன்கள் விளக்கப்பட்டன. ஏழாம் வகுப்பு மாணவன் அமித்தேஷ் சிறப்பாக யோகா பயிற்சிகளை நிகழ்த்தி காட்டினார். இதனால் பொதுமக்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியம், அடிப்படை யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகளை அறிந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் யோகாசனங்கள் மற்றும் லாபிங் தெரப்பியின் பயன்கள் அச்சிடப்பட்ட நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி