| ADDED : நவ 22, 2025 05:59 AM
திருப்பூர்: பகவான் ஸ்ரீசத்யசாய்பாபா நுாற்றாண்டு பிறந்த நாள் விழா முன்னிட்டு, பால விகாஸ் மாணவியர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் மாவட்ட சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில், ஒரு வார கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், திருப்பூர், பி.என்.ரோட்டில் உள்ள ஸ்ரீசத்யசாய் பவனில் தினமும் காலை மற்றும் மாலை நேரம் நகர சங்கீர்த்தனம், சிறப்பு பஜன் மற்றும் மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது. இவற்றில் சிறப்பு நிகழ்வாக பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று, ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. அன்பு என்ற தலைப்பில் மாவட்ட கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று காலை நகர சங்கீர்த்தனத்துக்குப் பின்னர் 'பிரேம தரு' மரம் நடும் நிகழ்வும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு விஜயம் செய்தல், பிற்பகல் நாராயண சேவை, மாலை நல்லுார் பகுதியில் பல்லக்கு சேவை நடக்கிறது. பி.என்.ரோடு மையத்தில் மாலை 4:00 மணிக்கு திருப்பூர் மற்றும் கொடைக்கானல் சாய் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது.