மேலும் செய்திகள்
தொடர் சாதனை நிகழ்த்திய தி பிரன்ட்லைன் பள்ளி
18-May-2025
திருப்பூர்: திருப்பூர், பெருமாநல்லுார், பாலசமுத்திரத்திலுள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.பத்தாம் வகுப்பில், ஸ்ரீ வர்ஷினி, 491 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வில், க்ரித்திக் பாண்டியன், 576 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பிளஸ் 2 வகுப்பில், 575 மதிப்பெண் பெற்ற மாணவர் அஸ்வின், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களிலும் தலா 97 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் பாலச்சந்திரன், கணிதத்தில் 98, வேதியியலில் 97, இயற்பியலில் 95 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் க்ரித்திக் பாண்டியன், ஜெஇஇ., மெயின்ஸ் தேர்வில், 94.43 சதவீதம் பெற்றுள்ளார்.பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை, பள்ளியின் தாளாளர் முருகசாமி, ஸ்ரீ விக்னேஸ்வரா பள்ளி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் பாராட்டினர். பொதுத்தேர்வில், 410க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1 சேர்க்கையில், 10 - 100 சதவீதம் வரை கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு 'நீட்', ஜெஇஇ., பவுண்டேஷன் வகுப்புகள் மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.இப்பள்ளியில் தற்போது, எல்.கே.ஜி., முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது, என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
18-May-2025