மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
04-Oct-2025
திருப்பூர்; திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில், 73வது ஆண்டு ஸ்ரீகேதாரீஸ்வரர் கேதார ஈஸ்வரி கவுரி அம்மன் (சுமங்கலி பூஜை) நடந்து வருகிறது. காமாட்சியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் துவங்கி, தீபாவளிக்கு மறுநாள் வரை, கவுரிவிரத சிறப்பு பூஜைகள் துவங்குகிறது. அதன்படி, கடந்த 3 ம் தேதி முதல், ஸ்ரீகவுரி பூஜை துவங்கியுள்ளது. வரும் தீபாவளிக்கு அடுத்த நாள் (21ம் தேதி), காலை, 10:00 மணிக்கு சிறப்பு மகாதீபாராதனை நடக்க உள்ளது.
04-Oct-2025