உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேதி மாற்றம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேதி மாற்றம்

உடுமலை; வரும், 22 மற்றும் 23ம் தேதி நடக்க இருந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று தீர்வு காணும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், கடந்த, 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.இந்நிலையில், வரும் 22 மற்றும் 23ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த முகாம்கள், ஆக.,மாதத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியம், அந்தியூரில் நடக்க இருந்த முகாம், வரும் ஆக., 2ம் தேதிக்கும், வரும், 23ம் தேதி, குடிமங்கலம் ஒன்றியம், வீதம்பட்டி மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடக்க இருந்த முகாம், ஆக., 9ம் தேதியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை