மேலும் செய்திகள்
மலையில் சிலம்பாட்டம் உறியடியுடன் பொங்கல் விழா
15-Jan-2025
மாற்றுத்திறனாளி மாணவர்கள் மருத்துவ முகாம்
28-Jan-2025
பல்லடம்; பல்லடம் ரோட்டரி ரெயின்போ சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டிகள், தனியார் மண்டபத்தில் நடந்தது.ரோட்டரி சங்க நிர்வாகி முத்துக்குமார் தலைமை வகித்தார். துணை கவர்னர் சுரேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் அனைத்து வயது பிரிவினருக்கான செஸ் போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிலையில், போட்டியின் இறுதியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
15-Jan-2025
28-Jan-2025